திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம்

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்றது.;

Update: 2023-03-22 11:38 GMT

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பரஞ்சோதி பேசினார்.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட, ஒன்றிய, பகுதி, நகர, பேரூர் கழக செயலாளர் சார்பு அணி செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வருகிற ௨௭ம் தேதி திருச்சிக்கு வருகை தரும் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

திருச்சி மாவட்ட அ.தி.மு.க. இணை செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இந்திரா காந்தி இல்ல மணவிழாவிற்கு திருச்சிக்கு வருகை தரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர், முன்னாள் முதல்வர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு மாவட்ட கழகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பது.

கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க நடைபெற உள்ள 2024 நாடாளுமன்ற தேர்தல் பணிகளை விரைவாக தொடங்கி வடக்கு மாவட்ட எல்லைக்குப்பட்ட மண்ணச்சநல்லூர்,ஸ்ரீரங்கம், துறையூர், முசிறி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்குவது,

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து எடப்பாடியார் தலைமையில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமைக்க அயராது பாடுபடுவது .

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்ச்சியில் மாவட்ட கழக அவைத் தலைவர் பிரின்ஸ் தங்கவேல், மாவட்ட கழக இணை செயலாளர் இந்திராகாந்தி, முன்னாள் அமைச்சர்கள் பூனாட்சி, வளர்மதி, ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் செல்வராசு, கழக எம்ஜிஆர் இளைஞரணி துணை செயலாளர் செல்வராஜ், முன்னாள் மாவட்ட கழக செயலாளர் சுப்பு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பரமேஸ்வரி முருகன், மல்லிகா சின்னசாமி, மாவட்ட கழக பொருளாளர் சேவியர், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல இணை செயலாளர் திருநாவுக்கரசு, மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் அறிவழகன் விஜய்,  உள்பட நிர்வாகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News