கொரோனாவால் உயிரிழந்த திருச்சி சமூக ஆர்வலர் குடும்பத்திற்கு நிதி உதவி

கொரோனாவால் உயிரிழந்த திருச்சி சமூக ஆர்வலர் குடும்பத்திற்கு ரூ.1,10 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது. நிதி உதவி

Update: 2021-09-24 07:34 GMT

திருச்சி ஸ்ரீரங்கத்தில் கொரோனாவிற்கு பலியான சமூக ஆர்வலர் ேஹமநாதன் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கப்பட்டது.

லோக் தந்திரிக் ஜனதா தளம் கட்சியின் மாநில பொதுச் செயலாளராகவும், திருச்சி ஸ்ரீரங்கம் கூட்டுறவு பண்டகசாலையில் துணை தலைவராகவும் இருந்தவர் ஹேமநாதன்.

சமூக ஆர்வலரான இவர் ஸ்ரீரங்கம் தொகுதி மக்களின் அடிமனை பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்காக போராடி வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தபோது தனது பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களை அதிக அளவில் மருத்துவ முகாம்களுக்கு அழைத்துச் சென்று கொரோனா தடுப்பூசி போட வைத்தார், ஹேமநாதன்.

ஆனால் பொது நலனில் அவர் காட்டிய அக்கறையை தனது உடல் நலத்தில் காட்டவில்லை. இதன் காரணமாக அவரை உயிர்க்கொல்லி நோயான கொரோனா தாக்கியது. அதில் இருந்து மீள முடியாத ஹேமநாதனை மரணம் முத்தமிட்டது. அவர் இறந்து விட்ட நிலையில் குடும்பம் வறுமையில் வாடுகிறது.

இந்நிலையில் ஹேமநாதனின் சமூகப் பணி மற்றும் பொது நலனில் அவர் காட்டிய அக்கறையை கருத்தில் கொண்டு லோக் ஜனதா தளம் கட்சியின் தமிழ்நாடு துணைத் தலைவரும், முன்னாள் திருச்சி மாநகராட்சி கவுன்சிலரும், ஹேமநாதனின் நெருங்கிய நண்பருமான கே.சி. ஆறுமுகம் தன்னால் முடிந்த அளவு பல்வேறு தரப்பினரிடமும் ஹேம நாதனுக்கு நிதி திரட்டினார்.

அப்படி திரட்டப்பட்ட நிதி ஒரு லட்சத்தி 10 ஆயிரத்தை வங்கியில் டெபாசிட் செய்து அவரது குடும்பத்திற்கு மாதாமாதம் வட்டி கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளார். திருச்சியில் நடந்த எளிய விழாவில் அதற்கான ஆவணங்களை கே.சி. ஆறுமுகம் ஹேமநாதனின் குடும்பத்தினரிடம் வழங்கினார். ஹேமநாதன் குடும்பத்திற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News