திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக ஆய்வில் 17 நபர்களுக்கு சான்றிதழ்

திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆய்வில் 17 நபர்களுக்கு சான்றிதழ்களை கலெக்டர் சிவராசு வழங்கினார்.;

Update: 2022-04-21 07:06 GMT
திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் பயனாளர்களுக்கு சான்றிதழ்களை கலெக்டர் சிவராசு வழங்கினார்.

திருச்சி திருச்சி மாவட்ட பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு பணி நடைபெற்றது. திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு ஆய்வு பணிகளை மேற்கொண்டதோடு 17 பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இதில் ஆதரவற்ற விதவை சான்று, பட்டா மாறுதல் சான்றிதழும் வழங்கப்பட்டது. நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் மாதவன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News