தொடர் மழையால் திருச்சி மாவட்டத்தில் 1,167 குளங்கள் நிரம்பின

தொடர் மழை காரணமாக, திருச்சி மாவட்டத்தில் 1,167 குளங்கள் நிரம்பி உள்ளன.

Update: 2021-11-12 03:45 GMT

கோப்பு படம்

திருச்சி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. தொடரும் மழையால் மாவட்டத்தில் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன.  மாவட்டத்தில், மொத்தம் 1,348 குளங்கள் உள்ளன. இதில் 1,167 குளங்கள் நிரம்பி உள்ளன. இதில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 33 குளங்களும், மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 13 குளங்களில் மூன்று  குளங்களும், கிராம ஊராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 1,131 குளங்களில் அனைத்தும்,  முழுமையாக நிரம்பி உள்ளன.

இதேபோல், பேரூராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 30 குளங்களில்,  ஒரு குளம் உள்பட,  மாவட்டம் முழுவதும் 9 குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளன. மேலும் 51 அடி உயரம் கொண்ட பொன்னனியாறு அணையில், 30.59 அடி நீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News