திருச்சி- புதுக்கோட்டை சாலையில் கொட்டப்பட்டு பகுதி மக்கள் மறியல்

திருச்சி- புதுச்கோட்டை சாலையில் கொட்டப்பட்டு பகுதி மக்கள் நடத்திய மறியல் போராட்டத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;

Update: 2021-12-03 14:19 GMT
திருச்சி- புதுக்கோட்டை சாலையில் கொட்டப்பட்டு பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

திருச்சியில் பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் மழைநீர் இன்னும் வடியாமல் தேங்கி நிற்கிறது. அதே போல திருச்சி கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழைநீர் இன்னும் வடியாமல் தேங்கிக் கிடக்கிறது. அதே சமயத்தில் கொட்டப்பட்டு குளம் நிரம்பியதால், கரை உடைக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

ஏற்கனவே குடியிருப்பை சுற்றி தேங்கியிருக்கும் தண்ணீர் வெளியேற முடியாமல் பல நாட்களாக தேங்கி நிற்கும் நிலையில், கொட்டப்பட்டு குளத்திலிருந்து தண்ணீர் திறக்கப்படுவதால் அந்த தண்ணீர் வடிய வழியில்லாமல் நிற்கிறது. இதனால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதன் காரணமாக இன்று திருச்சி – புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை கொட்டப்பட்டு பால் பண்ணை அருகே பொதுமக்கள் திடீர் என சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் போலீசார் போக்குவரத்தை மாற்றம் செய்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Tags:    

Similar News