திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் எஸ்.ஆர்.எம்.யூ. சார்பில் வாக்கெடுப்பு

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கம் சார்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

Update: 2023-11-21 14:41 GMT
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் எஸ்.ஆர்.எம்.யூ. சார்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

வேலை நிறுத்த போராட்டம் தொடர்பாக திருச்சி பொன்மலை  ரயில்வே பணிமனை ஊழியர்களிடம் எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கம் ரகசிய வாக்கெடுப்பு நடத்தியது.

பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும், 2024 ம்ஆண்டிற்கு முந்தைய நிலவரப்படி கடைசியாக வாங்கும் சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம் வழங்கவேண்டும், ஓய்வூதியத்துடன் விலைவாசி உயர்விற்கு ஏற்ப பஞ்சப்படி வழங்கவேண்டும், ஓய்வூதியத்தில் 40 சதவீதம் கம்யூட்டேஷன் வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யூ ரெயில்வே தொழிற்சங்கம் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே வேலை நிறுத்தத்தில் ஈடுபடலாமா வேண்டாமா என்பதுகுறித்து எஸ்.ஆர்.எம்.யூ உறுப்பினர்களிடம் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.இதன்படி  இன்று முதல் 3 நாட்கள் ரகசிய வாக்கெடுப்புநடைபெற்று வருகிறது. திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் எஸ். ஆர் எம். யூ. ரெயில்வே தொழிற்சங்கத்தினர் வாக்களித்து வருகின்றனர். எஸ் ஆர் எம் யூ தொழிற்சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் வீரசேகரன் இந்த பணிகளை  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News