திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் ஓராண்டில் பயன்பாட்டிற்கு வரும்

Trichy Panjabpur Integrated Bus Station, Building work inauguration, minister nehruதிருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் கட்டுமான பணி முடிந்து ஓராண்டில் பயன்பாட்டிற்கு வரும் என அமைச்சர் நேரு கூறினார்.

Update: 2022-10-10 13:28 GMT

Trichy Panjabpur Integrated Bus Station, Building work inauguration, minister nehruதிருச்சி  பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் கட்டுமான பணியை அமைச்சர் நேரு இன்று துவக்கி வைத்தார்.

Trichy Panjabpur Integrated Bus Station, Building work inauguration, minister nehruதமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கவேண்டும் என்பது திருச்சி மாவட்ட மக்களின் 25 ஆண்டு கால கோரிக்கை ஆகும்.இந்த கோரிக்கையை மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைந்ததும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. திருச்சி -மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் என்ற இடத்தில் உள்ள மாநகராட்சி இடத்தில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் மற்றும் கனரக வாகன சரக்கு முனையம் மற்றும் பல்வகை பயன்பாட்டிற்கான கட்டிடங்கள் கட்டுமான பணிக்கு கடந்த  டிசம்பர் மாதம் 30ந்தேதி  முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். 

இதனை தொடர்ந்து ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைய உள்ள இடத்தில் மணல் அடித்து நிலத்தை சமப்படுத்தும் பணி ரூ.20 கோடி திட்ட மதிப்பீட்டில் நடந்து வந்தது.

Trichy Panjabpur Integrated Bus Station, Building work inauguration, minister nehruஇந்நிலையில்  பஞ்சப்பூரில் ரூ.349.98 கோடி மதிப்பீட்டில், ஒருங்கிணைந்த பேருந்து முனையம், கனரக சரக்கு வாகன முனையம் மற்றும் பல்வகைப் பயன்பாட்டு மையம் கட்டுமானப் பணிகளை தமிழக  நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (10.10.2022) தொடங்கி வைத்து இப்பணிகளுக்கான வரைபடத்தினை பார்வையிட்டு, மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.


பின்னர் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

ஒருங்கிணைந்த பஸ் நிலையம்

Trichy Panjabpur Integrated Bus Station, Building work inauguration, minister nehruதிருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டுமானப் பணி ரூ.159 கோடி, பல்வகைப் பயன்பாட்டு மையம் கட்டுமானப் பணி ரூ.84.78 கோடி, கனரக சரக்கு வாகன முனையம் கட்டுமானப் பணி ரூ.65.90 கோடி, சாலைகள், மழைநீர் வடிகால் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் ரூ.40.30 கோடி என மொத்தம் ரூ.349.98 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக திருச்சி மற்றும் சுற்றியுள்ள மாவட்ட மக்கள் சார்பில்  தமிழ்நாடு முதலமைச்சருக்க  நன்றியைத் தெரிவித்து கொள்கிறோம். இந்த பணிகள் ஓர் ஆண்டு காலத்தில் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும்.

Trichy Panjabpur Integrated Bus Station, Building work inauguration, minister nehruபஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டும் பணி மொத்த பரப்பளவு 40.60 ஏக்கர் கட்டுமானப் பரப்பளவு 7.02 ஏக்கர் புறநகர் பேருந்து நிறுத்த தடங்கள் 124. நீண்ட நேர பேருந்து நிறுத்த தடங்கள் 142. குறைந்த நேர நிறுத்த தடங்கள் 78. ஆக மொத்த பேருந்து நிறுத்த தடங்களின் எண்ணிக்கை 404. நகரப்பேருந்து நிறுத்த தடங்கள் 60. கடைகளின் எண்ணிக்கை 70. நான்கு சக்கர வாகன நிறுத்தங்களின் எண்ணிக்கை 556. இரண்டு சக்கர வாகன நிறுத்தங்களின் எண்ணிக்கை 1125. ஆட்டோ ரிக்சா நிறுத்தங்களின் எண்ணிக்கை 350. நகரும் படிகட்டுகள் ஆகிய வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது.

பல்வகை பயன்பாடுகளுக்கான மையம் 

மொத்த பரப்பளவு 5.20 ஏக்கர். அடித்தள கட்டுமான பரப்பளவு 1.47 ஏக்கர் தரைத்தள கட்டுமான பரப்பளவு 2.46 ஏக்கர் முதல் தள கட்டுமான பரப்பளவு 2.29 ஏக்கர் 2ஆம் தளம், 3ஆம் தளம் மற்றும் 4ஆம் தள கட்டுமானங்களின் பரப்பளவு 0.22 ஏக்கர் தரைத்தள கடைகளின் எண்ணிக்கை 149. முதல் தள கடைகளின் எண்ணிக்கை 193.

கனரக சரக்கு வாகன முனையம்

மொத்த பரப்பளவு 29.00 ஏக்கர் கட்டுமான பரப்பளவு 2.88 ஏக்கர் தொகுப்பு -1 வாகன நிறுத்த தடங்கள் 256, தொகுப்பு -2 வாகன நிறுத்த தடங்கள் 104. தரைத்தள கடைகள் 20.முதல் தளம் - தங்குமிட வசதி, உணவக கட்டிடம் ஆகியவை அமைய உள்ளது.

சாலைகள், மழைநீர் வடிகால் மற்றும் உட்கட்டமைப்பு வசதி

சிமெண்ட் கான்கிரீட் சாலை நீளம் 1048 மீ. அகலம் 36 மீ.(ஒருங்கிணைந்த பேருந்து முனையம் பகுதி). சிமெண்ட் கான்கிரீட் சாலை நீளம் 744 மீ. அகலம் 24 மீ.(கனரக சரக்கு வாகன முனையம் பகுதி). ஒருங்கிணைந்த பேருந்து முனைய பகுதியில் பசுமை பரப்பு, மின்வசதி, குடிநீர் வசதி மற்றும் மழைநீர் வடிகால் செல்லும் வசதி ஆகியவை ஏற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர திருச்சி மாநகரில் ரூ.366.53 கோடிக்கு 1536 மீட்டர் நீள சாலை, குடிநீர் குழாய், பாதாள சாக்கடை உள்ளிட்ட பணிகள் 416.15 கி.மீ தூரத்திற்கு நடைபெற்று வருகிறது. அதில் 203.26 கி.மீ பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகளும் விரைவில் முடிவடையும்.

3 உயர்மட்ட பாலம்

Trichy Panjabpur Integrated Bus Station, Building work inauguration, minister nehruதிருச்சி அண்ணாசிலை முதல் ஜங்சன் வரை உயர்மட்ட பாலம் அமைப்பதற்கு ரூ.966 கோடியில் திட்ட மதிப்பீடு அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் டெண்டர் விடப்படும். காவேரி பாலம் முதல் மல்லாச்சிபுரம் வரை ரூ.480 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் அமைக்கப்பட உள்ளது. தலைமை தபால் நிலையம் முதல் கோர்ட் ரவுண்டானா வரை ரூ. 356 கோடியில் உயர் மட்ட பாலம் வர இருக்கிறது. அசூர் முதல் ஜீயபுரம் வரை ரூ. 1113 கோடி மதிப்பீட்டிலும், பஞ்சப்பூர் முதல் ஜீயபுரம் வரை ரூ. 700 கோடி  செலவிலும் சாலை பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்;பட்டு உள்ளது. இப்பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அனுமதித்திருக்கிறார் என்ற மகிழ்ச்சியான செய்தியை நான் தொpவித்துக்கொள்கிறேன்.

காவிரியில் புதிய பாலம்

Trichy Panjabpur Integrated Bus Station, Building work inauguration, minister nehruமேலும், உன்னியூர் முதல் நெரூர் காவிரிப் பாலம் வரை ரூ. 106 கோடி இது போன்ற பல்வேறு பணிகளுக்கு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் முதல் ஸ்ரீரங்கம் வரை புதிய காவேரி பாலம் ரூ.140 கோடியில் கட்டப்பட உள்ளது. காவேரி பாலத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகள் மூன்று மாதத்தில் முடிவடையும். கோரையாறு கரைப் பகுதி வழியாக சாலை அமைப்பதற்காக ரூ. 320 கோடி மதிப்பீட்டில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் துவங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிப் பணிகள் நடைபெறும் பகுதிகளில் மழைக் காலங்களில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவ்வாறு அமைச்சர் நேரு தெரிவித்தார்.

Trichy Panjabpur Integrated Bus Station, Building work inauguration, minister nehruஇந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், நகரப் பொறியாளர் சிவபாதம், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தர பாண்டியன், ஸ்டாலின்குமார், தியாகராஜன், பழனியாண்டி, அப்துல்சமது, மாவட்ட ஊராட்சித் தலைவர் இராஜேந்திரன், மாவட்டப் பிரமுகர் வைரமணி மற்றும் மாநகராட்சி கோட்டத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத்துறை மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News