திருச்சி ஓயாமரி சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் பரபரப்பு..
Oyamari Trichy-திருச்சி ஓயாமரி அருகே மெயின் ரோட்டில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு உண்டானது.;
Oyamari Trichy
Oyamari Trichy-திருச்சி-சென்னை பைபாஸ் ரோட்டில், சிந்தாமணி பகுதியை இணைக்கும் ஓயாமரி சுடுகாடு அமைந்துள்ள ரோட்டில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலம் செல்லும் வழியில் ஓயாமரி சுடுகாடு பகுதியில் இருந்து பாலம் தொடங்கும் இடத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. சுமார் 4 அடி அகலத்தில் புதிதாக போடப்பட்ட ரோட்டில் திடீரென கீழிறங்கி பள்ளம்ஏற்பட்டு உள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் இந்த பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அந்த பள்ளத்தை சுற்றி திருச்சி மாநகர போலீசார் தற்காலிக பிளாஸ்டிக் தடுப்புகளை வைத்து தடுப்பு ஏற்படுத்தியுள்ளனர். அந்த பகுதியில் புதிதாக சென்டர் மீடியன் கட்டப்பட்டு போடப்பட்ட ரோட்டில் ஏற்பட்ட இந்த திடீர் பள்ளம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2