எடப்பாடி பழனிசாமிக்கு திருச்சி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வாழ்த்து

எடப்பாடி பழனிசாமிக்கு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பரஞ்ஜோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.;

Update: 2022-09-04 11:24 GMT

ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொது குழு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் நடந்து வந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ஏற்கனவே தனி நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தொடரலாம் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வெற்றியை அ.தி.மு.க.வினர் கொண்டாடி விடுகிறார்கள். இந்நிலையில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மு. பரஞ்ஜோதி ,முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து அளித்து வாழ்த்து தெரிவித்தார்.

Tags:    

Similar News