திருச்சி மாநகராட்சி கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் துவங்கியது

Trichy Municipal Corporation -திருச்சி மாநகராட்சி கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் துவங்கியது. இதில் மாமன்ற உறுப்பினர்கள் பேசினார்கள்.;

Update: 2022-09-29 05:24 GMT

திருச்சி மாநகராட்சி கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் துவங்கியது.

Trichy Municipal Corporation -திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்று காலை மேயர் மு .அன்பழகன் தலைமையில் மாநகராட்சி கூட்ட அரங்கில் துவங்கியது. கூட்டத்திற்கு ஆணையர் வைத்திநாதன், துணைமேயர் திவ்யா முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் பலரும் மழை நீர் வடிகால் பிரச்சினை பற்றியும், மழை பெய்தால் தெருக்களில் நடக்க முடியாத சூழல்  ஏற்படுவதும் பற்றியும் இதற்கு மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்து பேசினார்கள். மேலும் சில கவுன்சிலர்கள் பாதாள சாக்கடை பணிகளை விரைவாக முடித்து சாலைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பேசினார்கள்.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News