மேயர் அன்பழகன் தலைமையில் திருச்சி மாநகராட்சி பகுதி சபா கூட்டங்கள்

மேயர் அன்பழகன் தலைமையில் திருச்சி மாநகராட்சி சார்பில் பகுதி சபா கூட்டங்கள் நடத்தப்பட்டது.

Update: 2023-12-10 18:21 GMT

திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன்  தலைமையில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது.

திருச்சி மாநகராட்சியின் ஐந்தாவது மண்டலத்துக்கு உட்பட்ட 27 வது வார்டு பட்டாபிராமன் பிள்ளை தெரு பகுதியில் ஆல் செயின்ஸ் பள்ளியில் நடைபெற்ற பகுதி சபா கூட்டத்திற்கு மேயர் அன்பழகன் தலைமை வகித்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கி குறைகளை கேட்டறிந்தார்.

இந்த கூட்டத்தில் சங்கீதபுரம் ஆட்டுமந்தை தெரு, சவேரியார் கோவில் தெரு, மீன்காரத தெரு, மல்லிகைபுரம், ஜெனரல் பஜார்,வண்ணாரப்பேட்டை, பெருமாள் கோவில் தெரு, பென்சனர் தெரு,விசுவப்ப நாயக்கன் பேட்டை, ரங்கநாதபுரம் தெரு, மூலகொள்ளை தெரு, தென்னூர் பட்டாபிராமன் பிள்ளை தெரு ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை மேயரிடம் அளித்தனர்.பொதுமக்கள் அளித்த 31 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் தெரிவித்தார்.

முன்னதாக மேயர் அன்பழகன் 27 வது வார்டு பகுதிகளுக்கு சென்று முடிவுற்ற திட்ட பணிகளையும் நலத்திட்டங்களையும் மற்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திட்ட பணிகளையும் பொதுமக்களிடம் விளக்கமாக எடுத்துரைத்தார்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 65 வார்டு பகுதிகளிலும் துணை மேயர், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் நகர பொறியாளர், செயற்பொறியாளர்கள், உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள், நிர்வாக அலுவலர்கள், உதவி வருவாய் அலுவலர்கள் ஆகியோர் முன்னிலையில் அந்தந்த வார்டுக்கு உட்பட்ட பகுதி சபா கூட்டம் நடைபெற்று பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெறுகிறார்கள். தகுதி உள்ள மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News