திருச்சி கே.கே. நகர் பகுதியில் புதிய மின்மாற்றிகள் திறந்து வைப்பு
திருச்சி கே.கே. நகர் பகுதியில் மூன்று புதிய மின்மாற்றிகள் எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் தொடங்கி வைத்தார்.;
திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட கலைஞர் கலைஞர் நகர் பகுதியில் 37, 38, 38(அ ) வார்டுகளில் உள்ள சி.கே.பி.கார்டன், கே.சாத்தனூர், லூர்துசாமி பிள்ளை தெரு ஆகிய பகுதிகளில் மின் பற்றாக்குறையைப் போக்கும் விதமாக புதிதாக 3 மின் மாற்றிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு சட்டமன்ற உறுப்பினர் முனைவர் இனிகோ இருதயராஜ் இன்று காலை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பகுதி கழக பொறுப்பாளர் மணிவேல், வட்ட கழக பொறுப்பாளர்கள் விஜய் ஆனந்த், எஸ். கே.மூர்த்தி மின்வாரிய செயற் பொறியாளர் சு.சிவலிங்கம், உதவி செயற்பொறியாளர் இ.சந்திரசேகர், சிறப்பு நிலையாக்க முகவர் சந்திரமௌளீஸ்வரன் பகுதி இளைஞரணி துணைச் செயலாளர் மாரிமுத்து, சந்திரசேகர் மற்றும் வட்ட கழக, பகுதி கழக நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.