ஜூன் 21. சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் யோகக்கலை முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மாவட்ட முதன்மை நீதிபதி மற்றும் அனைத்து நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் அனைவரும் யோகாவில் தடாசனம், பாதஹஸ்தாசனம், அர்த்த சக்ராசனம், திரிகோணாசனம், பரிவிருத்த திரிகோணாசனம், புஜங்காசனம், சலபாசனம், சேதுபந்தாசனம் அர்த்த ஹலாசனம், சாந்தியாசனம், கபாலபாதி பிராணாயாமம், நாடி சுத்தி பிராணாயாமம், தியானம் உட்பட பல்வேறு ஆசனங்கள் செய்து சர்வதேச யோகா தினத்தை கொண்டாடினர். திருச்சி அமிர்தா யோகா மந்திரம் யோகா ஆசிரியர் விஜயகுமார் ஆசன பயிற்சி குறித்து எடுத்துரைத்தார்.
2014 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் சர்வதேச யோகா தினம் முன்வரைவு ஒப்புதல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு முதல் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது .ஜீன் 21 ஆம் தேதி வடக்கு அரைக்கோளத்தில் ஆண்டின் மிக நீண்ட நாள் ஆகும். யோகக்கலையானது உடல் , மன மற்றும் ஆன்மீகப் பயிற்சியாகும் .