திருச்சி குட்கா வியாபாரி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
திருச்சியில் போலீசாரால் கைது செய்யப்பட்ட குட்கா வியாபாரி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.;
திருச்சி தனிப்படை போலீசாரும்,கோட்டை போலீசாரும் இணைந்து நடத்திய சோதனையில் மைசூரில்இருந்து வந்த முட்டைகோஸ் வேனில் கடத்தி வரப்பட்ட ரூ.30.50லட்சம் மதிப்பிலான குட்கா போதைபொருள் கடந்த மாதம் பிடிபட்டது. இந்த குட்காவானது திருச்சிகம்பரசம்பேட்டை கணபதி நகரைசேர்ந்த விஜயபாஸ்கர் (வயது 50) என்பவர்கேட்டுக்கொண்டதன் பேரில் மைசூரில் உள்ள பவர்லால் என்பவரால் அனுப்பிவைக்கப்பட்டது என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து விஜயபாஸ்கர் மற்றும் முத்து ஆகியோரை கோட்டை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த ரூ.3 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் குட்கா வியாபாரி விஜயபாஸ்கரை, கோட்டை போலீசார் பரிந்துரையின் பேரில் மாநகரபோலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டதற்கான ஆணை திருச்சி மத்திய சிறையில் இருக்கும் விஜயபாஸ்கருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.