திருச்சி காந்தி மார்க்கெட் அ.தி.மு.க. பகுதி செயலாளர் மீது வழக்குப்பதிவு
திருச்சி காந்தி மார்க்கெட் அ.தி.மு.க. பகுதி செயலாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.;
பெட்ரோல், டீசல் விலை உயர்வை தமிழக அரசு குறைக்க வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி மாநகர், புறநகர் தெற்கு, புறநகர் வடக்கு ஆகிய மாவட்ட அதிமுக சார்பில் திருச்சி ஜங்ஷன் வழிவிடு வேல்முருகன் கோவில் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி ஜங்ஷன் பகுதி யில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதோடு, கட்சி கொடியும் கட்டப்பட்டு இருந்தது. அனுமதியின்றி சுவரொட்டி ஒட்டியதாக காந்தி மார்க்கெட் அ.தி.மு.க. பகுதி செயலாளர் சுரேஷ்குப்தா மீது கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.