பொதுமக்களிடம் கோரிக்கை மனு பெற்றார் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.

திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.;

Update: 2021-12-06 16:22 GMT

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் பொதுமக்களிடம் இருந்து மனு வாங்கினார்.

கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எடத்தெரு பகுதியில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை பெறும் முகாம் இன்று நடந்தது. இந்த முகாமில் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் பெற்றுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில்

இதுவரை வாங்கப்பட்ட மனுக்களை எனது நேரடி பார்வையில் தனியாக குழு அமைத்து, முதியோர் ஓய்வூதியம், கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகள், போன்றவைகளை துறை வாரியாக பிரித்து அதற்கான மேல் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்து தகுதியான அனைவருக்கும் அனைத்து சலுகைகளும் கிடைக்க நிச்சயமாக பாடுபடுவேன். மேலும் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு கோரி கொடுத்த மனுக்களுக்கும் தீர்வு காண்பதற்கு நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த முகாமில் பகுதி கழக பொறுப்பாளர் ராஜ்முகமது, வட்ட செயலாளர் கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News