திருச்சி தி.மு.க. வேட்பாளர் ராமதாஸ் ரயில்வே காலனியில் வாக்கு சேகரிப்பு
திருச்சி தி.மு.க. வேட்பாளர் ராமதாஸ் கிராப்பட்டி ரயில்வே காலனியில் வாக்கு சேகரித்தார்.
திருச்சி மாநகராட்சி 55வது வார்டில் தி.மு.க. வேட்பாளராக வட்ட செயலாளர் வெ. ராமதாஸ் போட்டியிடுகிறார். வேட்பாளர் ராமதாஸ் இன்று கிராப்பட்டி ரெயில்வே காலனி பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.
அப்போது அங்குள்ள வாக்காளர்கள் மத்திய அரசு ஊழியர்களுக்கு என்றும் துணை நிற்கும் தி..முக.விற்கு தான் வாக்களிப்போம் என உறுதி அளித்தனர்.அவர்களிடம் வேட்பாளர் ராமதாஸ் ரெயில்வே காலனியில் அடிப்படை வசதி பிரச்சினைகளை தீர்த்து வைப்பேன் என வாக்குறுதி அளித்தார்.