திருச்சி மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு மற்றும் ஒருங்கிணைந்த கூட்டம்
திருச்சி மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு மற்றும் ஒருங்கிணைந்த கூட்டம் ஆட்சியர் மற்றும் நீதிபதி தலைமையில் நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் மற்றும் ஒருங்கிணைந்த கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், மாவட்ட முதன்மை நீதிபதி பாபு ஆகியோர் தலைமையில் இன்று 11.01.2024 நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர்அலுவலகக் கூட்ட அரங்கில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் மற்றும் ஒருங்கிணைந்த கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார், மாவட்ட முதன்மை நீதிபதி பாபு ஆகியோh;களின் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆவூர் பிரிவு சாலையில் உள்ள அன்னை சத்யா அம்மையார் அரசு குழந்தைகள் இல்லத்திலிருந்து மாத்தூர் அரசு சிறப்பு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று வர போதிய பேருந்து வசதி ஏற்படுத்தி தரவும், திருச்சிராப்பள்ளி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம், புஞ்சை சங்கேந்தி ஊராட்சியில் உள்ள குழந்தைகள் மைய கட்டிடத்தினை சுற்றி சுற்றுச்சுவர; அல்லது கம்பி வேலை அமைக்கப்படவும், பாதுகாப்பும் பராமரிப்பும் தேவைப்படுகின்ற சூழ்நிலையில் மீட்கப்படுகின்ற குழந்தைகள் குழந்தைகள் நலக்குழுவில் முன்னிலைப்படுத்தப்படுகின்றார்கள். இக்குழந்தைகளில் இதர மாநிலங்களை சேர்ந்த குழந்தைகள் மீட்கப்படுகின்ற நிலையில், பெற்றோர்களை வரவழைக்க இயலாத நிலையில் உள்ள குழந்தைகளை அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்புவதற்கு ஏதுவாக காவல்துறையின் மூலம் பாதுகாவலர் கோரவும் நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இளைஞர் நீதிச்சட்டத்தின் கீழ் பதிவு செய்து நடைபெற்று வருகின்ற குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் உள்ள குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு 3 மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவ முகாம் நடத்துதல் குறித்தும், குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஆதார் மற்றும் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம் பெறுவதில் உள்ள இடர்பாடுகள் குறித்தும், முகாம் மூலம் மேற்கண்ட சான்றிதழ்கள் பெறுவது குறித்தும் நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
சிறப்பு தத்துவள மையத்தினால் தத்து வழங்கப்படுகின்ற குழந்தைகளுக்கு தத்து இறுதி ஆணை வழங்கப்பட்ட 18 குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் காலதாமதம் இன்றி விரைவாக பிறப்பு சான்றிதழ் வழங்கிடவும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் குழந்தை பராமரிப்பு நிறுவனமாக செயல்பட்டு வந்த பல நிறுவனங்கள் விடுதிகளாக மாற்றிக்கொள்வதற்கு விடுதிகள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்ய பத்திரிக்கை வாயிலாக செய்தி வெளியிடுதல் குறித்தும், முக்கிய சிக்னல்களில் ஒலிப்பெருக்கி மூலம் பல்வேறு விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றது. இவ்விளம்பரங்களில் யாசகம் பெறும் குழந்தைகள் மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளை கண்டால் குழந்தைகள் உதவி மையம் 1098-ல் தகவல் தெரிவிப்பது குறித்து விளம்பரம் மேற்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும், குழந்தைகள் உதவி மையத்தின் ஆகஸ்ட்-2023 முதல் டிசம்பர்-2023 வரையிலான காலத்தில் நடைபெற்ற செயல்பாடுகள் குறித்து மீளாய்வும் மேற்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில் நீதித்துறை நடுவர்-6 .சிவக்குமார், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் ராகுல் காந்தி, சமூக நலத்துறையினர்,குழந்தை பாதுகாப்பு துறையினர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அரசு அலுவலர்கள், பாதுகாப்பு அலகு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.