திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமத்துவ நாள் உறுதி மொழி ஏற்பு
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமத்துவ நாள் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் நடந்தது.;
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று சட்டமேதை அம்பேத்கர் பிறந்த தின விழாவையொட்டி முதல்வர் அறிவுரையின்படி சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அதிகாரி (பொறுப்பு) அபிராமி தலைமை தாங்கி சமத்துவ நாள் உறுதிமொழியை படிக்க மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெயப்ரீத்தா, திருச்சி வருவாய் கோட்டாட்சியர் தவச்செல்வம், செய்தி மக்கள் தொடர்பு துறை உதவி இயக்குனர் செந்தில்குமார், கலெக்டர் அலுவலக மேலாளர்கள் சிவசுப்பிரமணிய பிள்ளை, தமிழ்க்கனி மற்றும் அதிகாரிகள் பணியாளர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.