பயிர்களை காப்பீடு செய்ய திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வேண்டுகோள்

விவசாயிகள் பயிர்களை காப்பீடு செய்ய திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2024-06-28 11:36 GMT

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்.

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2024-2025 ஆம் ஆண்டு காரீப் பருவ பயிர்களை காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டு, பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் காரீப் பருவத்தில் ஷீமா இன்சூரன்ஸ் கம்பெனி  என்ற காப்பீடு நிறுவனத்தால் செயல்படுத்தப்படவுள்ளது. விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன்னதாகவே காப்பீடு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தற்போது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் குறுவை நெல், நிலக்கடலை, சோளம், பருத்தி, சிறிய வெங்காயம், மரவள்ளி, மஞ்சள் மற்றும் வாழை பயிர்கள் காரீப் பருவத்தில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் வருவாய் கிராம அளவில் குறுவை நெல் பயிருக்கு பிரீமியத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.764-ஐ 31.07.2024 தேதிக்குள்ளும், பிர்கா அளவில் நிலக்கடலை பயிருக்கு பிரீமியத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.636-ஐ 16.09.2024 தேதிக்குள்ளும், சோளம் பயிருக்கு பிரீமீயத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.284-ஐ 16.09.2024 தேதிக்குள்ளும் மற்றும் பருத்தி பயிருக்கு பிரீமிய தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.477-ஐ 30.08.2024 தேதிக்குள்ளும் செலுத்த வேண்டும்.

மேலும் தோட்டக்கலை பயிர்களான சிறிய வெங்காயம் பயிருக்கு பிர்கா அளவில் பிரீமியத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.2088-ஐ 31.08.2024 தேதிக்குள்ளும் மரவள்ளி பயிருக்கு பிரீமியத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.1653-ஐ 16.09.2024 தேதிக்குள்ளும் மஞ்சள் பயிருக்கு பிரீமியத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.3646-ஐ 16.09.2024 தேதிக்குள்ளும் மற்றும் வாழை பயிருக்கு பிரீமியத் தொகையாக ஏக்கர்  ஒன்றுக்கு ரூ.3503-ஐ 16.09.2024 தேதிக்குள்ளும் காப்பீடு செய்ய விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

எனவே காரீப் பருவத்தில் சாகுபடி மேற்கொள்ளும் கடன் பெறும் விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலோ, அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ, மற்றும் கடன் பெறா விவசாயிகள் பொது சேவை மையங்களிலோ, (இ-சேவை மையங்கள்) அல்லது தேசிய பயிர் காப்பீட்டு இணையதளத்தில் உள்ள ‘விவசாயிகள் கார;னரில்” நேரிடையாகவோ, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் காப்பீடு செய்யலாம். விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் நடப்பு பசலிக்கான அடங்கல், இ-அடங்கல் ,விதைப்பு சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகத்தின்  முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான இரசீதையும் பொது சேவை மையங்களில் , தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் , தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம்.

இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு பயிர் காப்பீடு இணையதள முகவரியையோ அல்லது அருகிலுள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநரையோ மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநரையோ அல்லது வேளாண்மை அலுவலரையோ மற்றும் தோட்டக்கலை அலுவலரையோ அல்லது உதவி வேளாண்மை அலுவலரையோ மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலரையோ அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளையோ அல்லது இத்திட்டத்தை செயல்படுத்தும் காப்பீட்டு நிறுவனத்தையோ அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News