மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்
மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட வேண்டும் என திருச்சி மாவட்ட கலெக்டர் கூறினார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருச்சி பிரிவு சார்பில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் ஏப்ரல் 29ம் தேதி முதல் கோடைகால சிறப்பு பயிற்சி விளையாட்டு முகாம் நடந்தது. 440 மாணவ மாணவிகள் கலந்து கொண்ட முகாமில் தடகளம் ,கால்பந்து ,வாலிபால் ,ஹாக்கி மற்றும் ஊசு ஆகிய விளையாட்டுகளுக்கு பயிற்சியாளர்களை கொண்டு சர்வதேச தரத்தில் பல்வேறு அறிவியல் நுட்பங்களுடன் பயிற்சி அளிக்கப்பட்டது.
சிறப்பு பயிற்சியாக மல்லர் கம்பம், மல்யுத்தம் ஆகிய விளையாட்டுகளுக்கு நடத்தப்பட்ட முகாமில் மல்லர் கம்பத்தில் 60 பேர் மல்யுத்தத்தில் 25 பேர் கலந்து கொண்டனர். முகாம் நிறைவு விழா நடந்தது.
இதில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
மாணவர்களுக்கு ஒழுக்கம் ,தலைமை பண்பு ஆகியவற்றை கற்றுத்தரும் விளையாட்டானது மனநிலையை தெளிவாக்கி கூடுதல் உற்சாகத்தை தரும். மாணவர்கள் எங்கு சென்றாலும் வாழ்நாள் முழுவதும் ஏதாவது ஒரு விளையாட்டை தொடர்ந்து விளையாட வேண்டும் .அப்படி விளையாடும் போது அந்த விளையாட்டே உங்கள் வாழ்க்கை பாதையாக கூட மாறலாம். விளையாட்டு மீது முழு ஆர்வமும் ஈடுபாடும் இருந்தால் அதை உங்கள் வாழ்க்கை பாதையாக கூட மாற்றிக் கொள்ளலாம். அதை பெற்றவரிடம் தெரிவித்து அதில் பயணித்து வெற்றி பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட விளையாட்டு அலுவலர் (பொறுப்பு) வேல்முருகன் மற்றும் பயிற்சியாளர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.