திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2024-01-23 16:11 GMT

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.

திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன் இன்று மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள்  ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க பொதுச்செயலாளர் ரகுராமன் தலைமை தாங்கினார்.தலைவர் துரை, பொருளாளர் ராஜப்பா முன்னிலை வகித்தனர்.

அனைத்து மத்திய, நகர கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கும் இருபது சதவீத ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும், கேரளாவை போல் தமிழ்நாட்டில் உள்ள 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி ஆகியவற்றை இணைத்து தமிழ்நாடு வங்கி உருவாக்கிட வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது போல் 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும்,

வணிக வங்கியில் உள்ளது போல் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நகர கூட்டுறவு வங்கிகளை மாவட்ட அளவில் ஒருங்கிணைத்து பலப்படுத்திட வேண்டும், சிறப்பு ஊதியம் தொடர்ந்து வழங்க வேண்டும், தமிழக அரசிடம் இருந்து வரவேண்டிய நிலுவைத் தொகை முழுவதையும் உடனடியாக வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோரிக்கைகளுக்காக இன்று அவர்கள் வேலை நிறுத்தமும் செய்தனர். இதன் காரணமாக மத்திய கூட்டுறவு வங்கியில் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன. இந்த போராட்டம் நாளையும் (புதன்கிழமை) தொடர்ந்து நடைபெற உள்ளது.

தமிழக முழுவதும் உள்ள 23 மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சுமார் 1500 க்கும் மேற்பட்டோர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் குறித்து விரைவில் முடிவு எடுப்போம் என்று சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News