திருச்சி-திண்டுக்கல் இடையே மீண்டும் பாசஞ்சர் ரயில் சேவை தொடக்கம்

திருச்சி-திண்டுக்கல் இடையே பாசஞ்சர் ரயில் சேவை மீண்டும் தொடங்கி இருப்பது ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது.;

Update: 2021-10-08 04:49 GMT

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பாசஞ்சர் ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. மேலும் எக்ஸ்பிரஸ் ரயில்களும் சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டன. அவற்றிலுள்ள முன்பதிவு இல்லாத பெட்டிகளில் கூட முன்பதிவு செய்து தான் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்து இருப்பதை தொடர்ந்து பல வழித்தடங்களில் மீண்டும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் திருச்சி- திண்டுக்கல் இடையே ரயில் சேவை இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது. திண்டுக்கல்லில் இருந்து இன்று காலை 6:15 மணிக்கு புறப்பட்ட ரயில் 8. 25 மணிக்கு திருச்சி வந்தடைந்தது. இந்த ரயில் இன்று மாலை 5 மணிக்கு திருச்சி ஜங்ஷனில் இருந்து புறப்பட்டு 8.30 மணிக்கு திண்டுக்கல்லுக்கு சென்றடையும்.இந்த ரயிலில் மொத்தம் 12 பெட்டிகள் உள்ளன.

Tags:    

Similar News