திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க தேர்தலில் வேட்பு மனு தாக்கல்
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க தேர்தலில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.;
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற 24ம் தேதி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற உள்ளது. இதனையொட்டி தலைவர், துணை தலைவர், செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டியிடுவோர் வேட்பு மனு தாக்கல் செய்து வருகிறார்கள். தலைவர் பதவிக்கு வழக்கறிஞர் முல்லை சுரேஷ் மனு தாக்கல் செய்துள்ளார்.