தாயை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு
தாயை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.;
திருச்சி மாவட்டம் லால்குடி பக்கம் உள்ள பம்பரம் சுற்றி என்ற கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவரது மனைவி கலா ராணி (வயது 63). இவர்களது மகன் ராஜ்குமார் (வயது 40 )கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் ராஜ்குமார் தனது தாயிடம் செலவுக்கு பணம் கேட்டார். அவர் கொடுக்க மறுக்கவே கலாராணியை அடித்துக் கொலை செய்தார். இதையொட்டி லால்குடி போலீசார் ராஜ்குமாரை கைது செய்து திருச்சி மூன்றாவது அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி தங்கவேல், குற்றம்சாட்டப்பட்ட ராஜ்குமாருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும் ரூ 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.