பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கினார் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன்
திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்.;
திருச்சி மாநகராட்சி மைய அலுவலக கூட்ட அரங்கில் இன்று 22.08.2022 மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை வாங்கும் முகாம் நடைபெற்றது.இம்முகாமில் மேயர் அன்பழகன் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். அப்போது அருகில் துணைமேயர் திவ்யா, மாநகராட்சி , மண்டலக்குழுத் தலைவர்கள் மதிவாணன், துர்காதேவி, விஜயலட்சுமி கண்ணன் மற்றும் மாநகராட்சி நகர பொறியாளர்கள், உதவி ஆணையர்கள் உடன் இருந்தனர். பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் 25 மனுக்கள் பெறப்பட்டது.