பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கினார் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன்
திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் பொதுமக்களிடம் இருந்து இன்று மனுக்கள் வாங்கினார்.
திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெற்றது. மேயர் அன்பழகன் தலைமையில் ஆணையர் வைத்திநாதன் முன்னிலையில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் வாங்கப்பட்டது. அப்போது சாலைப்பணிகள், மின் விளக்கு மற்றும் சாக்கடை பிரச்சினைகள் தொடர்பாக பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.