மேயர் அன்பழகன் தலைமையில் திருச்சி மாநகராட்சி வளர்ச்சி பணிகள் கூட்டம்

மேயர் அன்பழகன் தலைமையில் திருச்சி மாநகராட்சி வளர்ச்சி திட்ட பணிகள் பற்றிய ஆய்வு கூட்டம் நடந்தது.;

Update: 2022-03-18 12:59 GMT
திருச்சி மாநகராட்சி வளர்ச்சி பணிகள் பற்றிய ஆய்வு கூட்டம் இன்று மேயர் அன்பழகன் தலைமையில் நடந்தது.

திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று மேயர் மு. அன்பழகன் தலைமையில் அவசர ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு துணை மேயர் திவ்யா, ஆணையர் முஜிபுர் ரகுமான் முன்னிலை வகித்தனர்.

திருச்சி நகரின் பல்வேறு பகுதிகளிலும் சீர்மிகு நகரம் எனப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் செய்யப்பட்டு வரும் பணிகளை துரிதப்படுத்துதல், மத்திய அரசின் அம்ருத் மற்றும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைவு படுத்துவது தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தில் மாநகராட்சியின் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்

Tags:    

Similar News