சாலை விபத்தில் திருச்சி மாநகராட்சி ஊழியர் உயிரிழப்பு
பணிக்கு வரும் போது நடந்த சாலை விபத்தில் திருச்சி மாநகராட்சி ஊழியர் உயிரிழந்தார்.
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் 62 வது வார்டு மாநகராட்சி நிரந்தர தூய்மை பணியாளராக வேலை செய்தவர் பாலையன். மற்றும் அவருடன் சக ஊழியராக பணியாற்றுபவர் பழனி. இவர்கள் இருவரும் நேற்று காலையில் பஞ்சப்பூர் பசுமை பூங்காவில் இருந்து எடமலைப்பட்டி புதூரில் உள்ள வார்டு அலுவலகத்திற்கு வருகை பதிவேட்டில் கையெழுத்திட இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.
எடமலைப்பட்டிபுதூர் செக் போஸ்ட் அருகே வந்து கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த தனியார் லாரி இவர்கள் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பாலையன் பலியானார். உடன் பயணித்த சக ஊழியர் பழனி பலத்த காயங்களுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்,.
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் 62 வது வார்டு மாநகராட்சி நிரந்தரஊழியர் தூய்மை பணியாளராக பணியாற்றி கொண்டிருக்கும் பாலையன் மற்றும் அவருடன் சக ஊழியராக பணியாற்றும் பழனி , இருவரும் நேற்று காலையில் பஞ்சப்பூர் பசுமை பூங்காவில் இருந்து எடமலைப்பட்டி புதூரில் உள்ள வார்டு அலுவலகத்திற்கு வருகை பதிவேட்டில் கையெழுத்திட இருவரும் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது எடமலைப்பட்டிபுதூர் செக் போஸ்ட் அருகே வந்து கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த நவீன் வாட்டர் சர்வீஸ் லாரி இவர்கள் மேல் மோதியதில் சம்பவ இடத்திலேயே பாலையன் பலியானார், உடன் பயணித்த சக ஊழியர் பழனி பலத்த காயங்களுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், இறந்த பாலையனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து வெளிவந்த அவரது உடலுக்கு , திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 4 வது மண்டல தலைவர் துர்கா தேவி , ஏஐடியூசி பொதுச் செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான க.சுரேஷ் மற்றும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஊழியர்கள் இறந்த பாலையனுக்கு மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் இறுதியாக அவரது இல்லத்தில் அவரது உடலுக்கு திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வரி மற்றும் நிதி குழு தலைவர் முத்து செல்வம்,62 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுபா மற்றும் குடும்பத்தினர் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இறந்த பாலையனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து வெளிவந்த அவரது உடலுக்கு , திருச்சி மாநகராட்சி 4 வது மண்டல தலைவர் துர்கா தேவி , ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச் செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான க.சுரேஷ் மற்றும் திருச்சி மாநகராட்சி ஊழியர்கள் இறந்த பாலையனுக்கு மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் இறுதியாக அவரது இல்லத்தில் அவரது உடலுக்கு திருச்சி மாநகராட்சி வரி மற்றும் நிதி குழு தலைவர் முத்து செல்வம்,62 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுபா மற்றும் குடும்பத்தினர் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.