பழுதடைந்த சாலைகளை திருச்சி மாநகராட்சி 23-வது வார்டு கவுன்சிலர் ஆய்வு

பழுதடைந்த சாலைகளை திருச்சி மாநகராட்சி 23-வது வார்டு கவுன்சிலர் சுரேஷ் ஆய்வு செய்தார்.;

Update: 2022-04-06 06:14 GMT

திருச்சி மாநகராட்சி 23வது வார்டு கவுன்சிலர் சுரேஷ் சாலை பராமரிப்பு பற்றி அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.

திருச்சி மாநகராட்சி 23வது வார்டு பகுதியில் மாமன்ற உறுப்பினர்க. சுரேஷ் கோ- அபிஷேகபுரம் கோட்டம் உதவி ஆணையர் மற்றும் சுகாதார அலுவலர், இளநிலை பொறியாளர் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர் உள்ளிட்டோர் கிழக்கு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும்பாளையம் பஜார் பிரதான சாலை காந்திபுரம் ஆரம்ப சுகாதார நிலையம், என்பது அடி ரோடு புதுத்தெரு, சின்ன செட்டி தெரு பொது குடிநீர் குழாய், செவ்வந்தி பிள்ளையார் கோவில் தெரு பகுதி பொது குடிநீர் குழாய் பாதிப்புகள் மற்றும் பழுதடைந்த சாலைகளை கள ஆய்வு மேற்கொண்டனர்.

உடனடியாக சரி செய்ய வேண்டிய பணிகள் குறித்து மாநகராட்சி உதவி ஆணையர் செய்வதற்கு உறுதியளித்ததோடு, இதர பணிகள் விரைவில் செய்வதற்குரிய ஆலோசனைகளும் வழங்கி சென்றார்.

Tags:    

Similar News