திருச்சியில் ஒரேநாளில் 705 பேருக்கு கொரோனா பாதிப்பு - 2 பேர் பலி

திருச்சியில் ஒரேநாளில் 705 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது; 2 பேர் பலியாகினர்.

Update: 2022-01-22 23:30 GMT

திருச்சி மாவட்டத்தில்  நேற்று (22-1-2022) ஒரே நாளில் மட்டும் 705 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 452 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்கள் மற்றும் வீடுகளில் இருந்து 4,107 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேர் பலி என்று அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News