திருச்சி மாநகர காவல் துறைக்கு ரோந்து பணிக்காக 14 அதிநவீன வாகனங்கள்

திருச்சி மாநகரில் உள்ள காவல் நிலையங்களுக்கு ரோந்து பணிக்காக 14 அதிநவீன வாகனங்கள் வழங்கப்பட்டது;

Update: 2022-02-10 15:19 GMT

திருச்சி மாநகர காவல் துறைக்கு புதிதாக வழங்கப்பட்ட 14 நவீன வாகனங்களை போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் கொடியசைத்து தொடங்கி  வைத்தார்.

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக ஜி.கார்த்திகேயன், பொறுப்பேற்றதில் இருந்து மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், பொதுமக்களின் நலனை பேணிகாக்கவும், ரோந்து பணி செய்யவும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கி வருகிறார்.

தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பழைய ரோந்து வாகனங்களுக்கு பதிலாக அதிநவீன கேமராக்கள், GPS, VHF Mike, PA System, Power Window, Air Conditioning, Beacon light, Rear Camera, போன்ற வசதிகள் கொண்ட ரோந்து வாகனங்களை அனைத்து மாநகரங்களுக்கும் வழங்க தமிழக காவல்துறை நவீனமயமாக்கல் திட்டத்தின்படி அரசின் உத்தரவின்படி காவல்துறை ரோந்து பணிக்காக திருச்சி மாநகர காவல்துறைக்கு வழங்கப்பட்டது.

அவ்வாறு வழங்கிய வாகனங்களை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காவல் ரோந்து பணிக்காக ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் ஒரு ரோந்து வாகனம் வீதம் மொத்தம் 14 வாகனங்களை சம்மந்தப்பட்ட காவல்நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்களுக்கு வழங்கியும், குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும், பொதுமக்களின் அவசர அழைப்பிற்கு உடனே சென்று சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும், வாகன தணிக்கை செய்யவும், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

Tags:    

Similar News