திருச்சி மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது
திருச்சி மாநகராட்சி தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது.;
திருச்சி மாநகராட்சியில் மொத்தம் 65 வார்டுகள் உள்ளன. இந்த 65 வார்டுகளின் கவுன்சிலர் பதவியிடங்களுக்கு முக்கிய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 389 பேர் போட்டியிட்டனர்.
பிப்ரவரி 19ம் தேதி வாக்குப்பதிவு முடிவடைந்ததும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையமான திருச்சி ஜமால் முகமது கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்குள்ள ஸ்ட்ராங் ரூம் எனப்படும் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. அந்த அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் உள்பட ௩ அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை ஜமால் முகமது கல்லூரில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடு காலை 6 மணிக்கெல்லாம் தொடங்கியது. வேட்பாளர்கள் மற்றும் அவர்களது தலைமை ஏஜெண்டுகள் வரத் தொடங்கினர்.
போலீசார் அவர்களை பரிசோதனை செய்து உள்னே அனுப்பினர். இதனை தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள 4 வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு அவர்கள் பிரித்து அனுப்பப்பட்டனர். முதலில் தபால் வாக்குகள் சரியாக காலை 8 மணிக்கு தொடங்கியது.