தண்ணீரால் சூழப்பட்ட திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி பள்ளி

தண்ணீரால் சூழப்பட்டுள்ளதால் திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி பள்ளி மாணவ மாணவிகள் அவதி அடைந்து வருகிறார்கள்.

Update: 2022-08-30 10:57 GMT

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி பள்ளி தண்ணீரால் சூழப்பட்டுள்ளது.

திருச்சியில் கடந்த 2 நாட்களாக பெய்த பலத்த மழையினால்  செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியியை சுற்றி  தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால்  மாணவ, மாணவிகள் மிகவும் கஷ்டபட்டு பள்ளிக்கு  செல்கிறார்கள்.

இதில் சைக்கிளில் வரும் மாணவகள் கீழே விழுந்து அவர்களது சீருடை சகதி ஆகிறது. பள்ளியிற்குள்ளே வர சிரமப்படுகிறார்கள். இனி மழை காலம் என்பதால் இதை மாநகராட்சி நிர்வாகம் உடைடியாக கவனித்து சரி செய்து தருமாறு பள்ளி வரும் பெற்றோர்கள் அதிகாரிகளுக்கு  கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News