புகார் மனு தொடர்பாக திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. அறிவிப்பு

பொதுமக்கள் அளிக்கும் புகாரில் நோட்டரி வக்கீல் கையெழுத்து தேவையில்லை என மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. தெரிவித்துள்ளார்.;

Update: 2022-01-04 10:02 GMT

திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன்.

திருச்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகள் தொடர்பாக திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. அல்லது மற்ற காவல் உயர் அதிகாரிகளை அலுவலகத்தில் நேரில் சந்தித்து அளிக்கும் புகார் மனுவில் அல்லது தபால் மூலம் அனுப்பும் புகார் மனுவில் நோட் டரி பப்ளிக் அல்லது வக்கீல்களிடம் கையெழுத்து பெற வேண்டிய அவசியமில்லை.

மாறாக, பொதுமக்கள் தாங்களே சுயமாக கையால் எழுதியோ அல்லது தட்டச்சு செய்தோ கையொப்பமிட்டு அளிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இந்த தகவலை மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News