திருச்சி மத்திய சிறையில் கைதிகளிடம் குறை கேட்டார் சட்டத்துறை அமைச்சர்

திருச்சி மத்திய சிறையில் அமைச்சர்கள் ரகுபதி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைதிகளிடம் குறை கேட்டனர்.

Update: 2021-10-17 13:45 GMT

திருச்சி மத்திய சிறையில் ஆய்வு செய்த அமைச்சர்கள் ரகுபதி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

திருச்சி மத்திய சிறையில் சிறைக் கைதிகளால் தயாரிக்கப்படும் போர்வை, கம்பளி, அரசு மருத்துவமனைகளுக்கான பேண்டேஜ் துணி, ரொட்டிகள், அணிவகுப்பு தொப்பி, குளியல் மற்றும் சலவை சோப்பு, இனிப்புமற்றும் காரம் தயாரிப்புப் பணிகள், கோப்பு அட்டைகள், ஆயத்த ஆடைகள் உள்ளிட்டவற்றையும் பார்வையிட்டு அதன் விவரங்களை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர்  கேட்டறிந்தனர்.

அதனைத் தொடர்ந்து, சிறைச்சாலையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தினையும்  அதில் உள்ள பாடப்பிரிவுகளான பிட்டர், வெல்டர், எலெக்ட்ரீசியன், கம்ப்யூட்டர், டெய்லரிங் ஆகியபாடப்பிரிவுகள் சொல்லித்தரப்படுவதையும், இதனைப் படிக்கக் கூடிய சிறைக்கைதிகளின் விவரத்தையும் கேட்டறிந்தனர். இந்திய அளவில், தமிழ்நாட்டில் திருச்சி மத்திய சிறையிலும்,ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் சிறையிலும் ஆகிய இரண்டு இடங்களில் மட்டும்தான் இந்ததொழிற்பயிற்சி நிலையம் உள்ளதாக அமைச்சர்களிடம் அலுவலர்கள் தெரிவித்தனர்.

பின்னர் சமையலறையினையும் காலை உணவாகத் தயாரிக்கப்பட்ட, கோதுமை உணவான கோதுமை சப்பாத்தி, கோதுமைத் தோசை, கஞ்சி, வெங்காய சட்டினி, தேனீர், உள்ளிட்டவற்றை சட்டத்துறை அமைச்சர்சாப்பிட்டுப் பார்த்து உணவின் தரத்தினை ஆய்வு செய்தார்.

இதனை தொடர்ந்து முதல் முறையாக குற்றம் செய்து சிறைத்தண்டனை பெற்ற கைதிகளிடம் கலந்துரையாடி, அவர்களுக்கு போதிக்கப்படும் கல்வி, நல்லொழுக்கம் குறித்தும், 18 வயது முதல் 24வயதுக்குட்பட்டவர்களுக்கான "பட்டம்" எனும் திட்டத்தின் செயல்பாடு குறித்தும் கேட்டறிந்தனர்.தொடர்ந்து தண்டனைக் கைதிகள் இருப்பிடத்தைப் பார்வையிட்டு அவர்களிடம் கலந்துரையாடிஅவர்களுக்கான பயிற்சி வழங்கப்படுகின்ற கல்வி, முன்னேற்றத்திற்கான செயல்பாடுகள் குறித்துகேட்டறிந்தனர்.

பின்னர் மருத்துவமனையினை பார்வையிட்ட அமைச்சர் இருவரும்,அங்கு வழங்கப்படும் சிகிச்சை, மருந்துகள் இருப்பு, தொடர் சிகிச்சைக்கான நடவடிக்கைகளைஆய்வு செய்தனர். சிறையில் உள்ள பகுதியில் மேற்கொள்ளப்படவேண்டிய பராமரிப்புப் பணிகள்குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தனர்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு, திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எஸ்.இனிகோ இருதயராஜ், திருச்சி சரக சிறைகள் மற்றும்சீர்திருத்தப் பணிகள் துணைத்தலைவர் ஆர்.கனகராஜ், மத்திய சிறை கண்காணிப்பாளர் எம்.ஊர்மிளா, மாநகர காவல் துணை ஆணையர் (சட்டம் & ஒழுங்கு) ஆர்.சக்திவேல், சிறைஅலுவலர் எம்.சதீஷ் குமார், திருச்சி பெண்கள் தனிச்சிறை கண்காணிப்பாளர்ராஜலெட்சுமி, கண்டோன்மெண்ட் காவல் உதவி ஆணையர் அஜய்தங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News