திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் ஐ.ஜி.கணேசன் ஆய்வு

சிறந்த போலீஸ் நிலையமாக தேர்வு செய்யப்பட்ட திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் ஐ.ஜி.கணேசன் ஆய்வு செய்தார்.

Update: 2021-10-27 11:06 GMT

திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஐ.ஜி. கணேசன் ஆய்வு நடத்தினார்.

தமிழகத்தில் உள்ள போலீஸ்  நிலையங்களில் வழக்குகள் கையாள்வது, கோப்புகளை சிறந்த முறையில் பராமரிப்பது, விரைவாக விசாரணை நடத்தி முடிப்பது ஆகியவற்றில் சிறந்த முறையில் செயல்பட்ட 3 போலீஸ் ஸ்டேஷன்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில் சிறந்த போலீஸ் ஸ்டேஷனாக தேர்ந்தெடுக்கப்பட்ட திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் ஸ்டேஷனின் தகுதி குறித்து  தமிழக காவல்துறை தலைமை அலுவலக ஐ.ஜி. கணேசன் இன்று ஆய்வு செய்தார்.

Similar News