திருச்சி பேக்கரி உரிமையாளர் மீது ஐ.ஜி.யிடம் கொலை மிரட்டல் புகார்

கொலை மிரட்டல் விடுத்த பேக்கரி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.ஜி.யிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.;

Update: 2021-10-20 04:15 GMT
திருச்சியில்  கொலை மிரட்டல் விடுத்ததாக பேக்கரி கடை உரிமையாளர் மீது ஐ.ஜி.யிடம் புகார் கொடுக்க வந்தவர்கள்.

முஸ்லிம் உரிமை பாதுகாப்புக்கழக மாநில பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில்  திருச்சி மண்டல ஐ.ஜி.பாலகிருஷ்ணனை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தார்.

அதில், நான் திருச்சி வடக்கு காட்டூர் காந்திநகர் பகுதியில் வசித்து வருகிறேன். நான் திருச்சி-தஞ்சை ரோட்டில் உள்ள ஒரு பேக்கரி கடையில் குழந்தைகளுக்கு உணவு பொருட்கள் வாங்கினேன்.

அப்போது அந்த பொருட்களின் தரம் குறைவாக இருந்தது. இது தொடர்பாக கடை ஊழியரிடம் கேட்டபோது அவர் பொறுப்பற்ற முறையில் பதில் அளித்தார். இந்த நிலையில்உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலரை தொடர்பு கொண்டு அந்த கடையில் ஆய்வு செய்வதற்காக புகார் அளித்தேன். இதையடுத்து அந்த கடையில் சோதனை நடத்தப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் என் செல்போனுக்கு தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்தனர். ஆகவே அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Tags:    

Similar News