திருச்சி விமான நிலையத்தில் ரூ. 66 லட்சம் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து ரூ. 66 லட்சம் மதிப்பில் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது.;

Update: 2022-02-20 07:13 GMT

திருச்சி விமான நிலையம் (பைல் படம்).

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லும் விமானம் ஏர் இந்தியா பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு பின்னர் பயணிகளை விமானத்தில் ஏற அனுமதித்தனர். அப்போது திருச்சியை சேர்ந்த முகமது யூசுப் (வயது 48) என்ற பயணியின் உடமைகள் சோதனைசெய்யப்பட்டது. அப்போது அவர் வைத்திருந்த கைப் பையில் இருந்து ரூ. 66லட்சம் மதிப்பிலான ஓமன், குவைத், மலேசியா, ரிங்கிட் ஆகிய வெளிநாட்டு கரன்சிகளை வைத்திருந்தது தெரிய வந்தது.

இது குறித்து சுங்கத்துறையினர் விசாரணை செய்ததில் இந்த பணத்தினை எடுத்து செல்வதற்கு அவரிடம் உரியஆவணம் இல்லாதது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரிடமிருந்த கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது.தொடர்ந்து, அவரிடம் யாருக்கு கொடுக்க பணத்தை கொண்டு செல்கிறார்? யார் இந்த பணத்தை கொடுத்து அனுப்பினார்?இதற்கு முன்பு இது போன்று பணம் ஏதும் எடுத்துசென்றுள்ளாரா?என்பது குறித்து விசாரணைநடத்திவருகின்றனர்.

Tags:    

Similar News