திருச்சி விமான நிலையத்தில் இன்று முதல் பயணிகளுக்கு ஒமிக்ரான் பரிசோதனை

திருச்சி விமான நிலையத்தில் இன்று முதல் வெளிநாட்டு பயணிகளுக்கு ஒமிக்ரான் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

Update: 2021-12-01 05:35 GMT
திருச்சி விமான நிலையம் (பைல் படம்)

ஒமிக்ரான் என்ற புதிய வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனையடுத்து இந்தியாவில் விமான நிலையங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. அந்த வகையில் வெளிநாடுகளிலிருந்து குறிப்பாக சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வரும் பயணிகள் அனைவரும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி விமான நிலையத்திற்கு முதன் முதலாக இன்று காலை 6 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் வந்த பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட னர். இதற்காக விமான நிலையத்துக்குள் இடம் ஒதுக்கப் பட்டுள்ளது. சோதனை செய்யப்பட்ட பயணியின் சோதனை முடிவு வந்த பிறகு அவர்கள் தங்கள் இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடை முறை இன்று (புதன்கிழமை) காலை முதல் அமலுக்கு வந்துள்ளது.

Tags:    

Similar News