திருச்சி விமான நிலையத்தில் ஏற்றுமதி அதிகம்- இறக்குமதி மிக குறைவு
திருச்சி விமான நிலையத்தில் சரக்கு ஏற்றுமதி அதிகம். இறக்குமதி மிக குறைவு என விமான நிலைய இயக்குனர் தெரிவித்தார்.
உள்நாட்டில் உற்பத்தியாகும் பொருட்கள் வெளிநாடு களுக்கு ஏற்றுமதி செய்தால் அந்நிய செலாவணி அதிகரித்து நாட்டின் பொருளாதா ரம் உயரும். இந்த ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்திற்கு கப்பல் மற்றும் விமானம் முக்கிய பங்காற்றி வருகிறது. அதிலும் விமான சரக்கு போக்குவரத்து விரைவான சேவையை வழங்குகிறது.
கொரோனா காலகட்டத்தில் இந்தியா உள்பட உலகம் முழுவதும் ஏற்றுமதி மிகவும் பாதிப்புக்குள்ளானது. அதன் பின்னர் தற்போது சரக்கு ஏற்றுமதி பல நாடுகளில் சீராகியுள்ளது.ஆனால் திருச்சிக்கு சரக்குகளை கையாள தனி விமானங்கள் இயக்கப்ப டவில்லை. தற்போது வரை பயணிகள் விமானத்தில் மட்டுமே சரக்குகள் கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது.இதில் முதலில் பயணிக ளுக்கு முன்னுரிமை அளிக்கி ன்றனர்.
அவர்களின் உடமைகள் வைக்கும் இடத்தை தவிர்த்து மீதமுள்ள இடத்தி ற்கு தகுந்தார் போல் சரக்கு ஏற்ற அனுமதி அளிக்கப்படுகிறது.திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர், துபாய், அபுதாபி, சார்ஜா, குவைத், மஸ்கட், தோகா, கொழும்பு உள்ளிட்ட நாடுகளுக்கு அதிகளவு சரக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தினமும் இங்கிருந்து 18 மெட்ரிக் டன் சரக்கு வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சராசரியாக மாதத்திற்கு 550 மெட்ரிக் டன்னும் ஆண்டுக்கு 6,409 மெட்ரிக் டன் சரக்குகளும் கையாளப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.இதில் 98 சதவீதம் காய்கறிகள்,பழங்கள், பூக்கள், கீரை வகைகள், பால் பொருட்கள், மீன்கள் ஆகியவையாகும்.மீதி இரண்டு சதவீதம் மட்டுமே துணி வகைகள் வீட்டு உபயோக பொருட்கள் பரிசு பொருட்கள் மற்றும் புத்தகங்கள் செல்கிறது.
இது தொடர்பாக திருச்சி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி கூறும் போது,திருச்சி விமான நிலையத்தை பொறுத்தவரை ஏற்று மதியை ஒப்பிடும்போது இறக்குமதி 2 சதவீதம் மட்டுமே உள்ளது. இதற்குப் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் அவற்றை சரி செய்வதற்கு முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.