திருச்சி விமான நிலையத்தில் ரூ.16 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
துபாயில் இருந்து திருச்சிக்கு உடமையில் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ.16 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.;
துபாயில் இருந்து திருச்சிக்கு நேற்று ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகள் மற்றும் ஆவணங்களை இமிகிரேசன் அதிகாரிகள், வான்நுண்ணறிவு சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் வான் நுண்ணறிவு சுங்க அதிகாரிகள் நடத்திய சோதனையில், ராமநாதபுரத்தை சேர்ந்த முத்தூண்டி (வயது 43) என்பவர் அவரது உடமையில் மறைத்து எடுத்து வந்த 313 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.16 லட்சம் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.