சுயேச்சையிடம் திருச்சி அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மகன் தோல்வி
சுயேச்சையிடம் திருச்சி அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மகன் தோல்வியை தழுவினார்
திருச்சி மாநகராட்சி 20 -வது வார்டில் சுருளிராஜன் (தி.மு க.) ஜவகர்லால் நேரு (அ.தி.மு.க) கே.சி.ஆறுமுகம்( லோக்தந்திரிக் ஜனதா தளம் கட்சி), முரளிதரன் (பா.ஜ.க) மற்றும் சுயேச்சைகள் உள்பட இந்த வார்டில் 16 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இதில் சுயேச்சை வேட்பாளர்களில் ஒருவரான எல். ஐ. சி.சங்கர் என்பவர் வெற்றி பெற்றுள்ளார். இவர் இந்த வார்டு முன்னாள் கவுன்சிலர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வார்டில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய ஜவர்கலால் நேரு திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் முன்னாள் சுற்றுலாத் துறை அமைச்சருமான வெல்லமண்டி நடராஜனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க. மாவட்ட செயலாளரின் மகன் சுயேச்சை வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவி உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.