திருச்சி 54வது வார்டு தி.மு.க. வேட்பாளர் புஷ்பராஜுக்கு வியாபாரிகள் ஆதரவு

திருச்சி 54வது வார்டு தி.மு.க. வேட்பாளர் புஷ்பராஜுக்கு மளிகை வியாபாரிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.;

Update: 2022-02-09 16:02 GMT

வேட்பாளர் புஷ்பராஜுக்கு மளிகை வியாபாரிகள் ஆதரவு தெரிவித்தனர்.

திருச்சி மாநகராட்சி 54வது வார்டு தி.மு.க. வேட்பாளராக டி. புஷ்பராஜ் போட்டியிடுகிறார். புஷ்பராஜ் இன்று காலை மிளகுபாறை, பொன்னகர், ராஜாகாலனி, கோரி மேடு பகுதிகளில் வீடு வீடாக வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.


இந்நிலையில்  இன்று மாலை பெரிய மிளகுபாறை பகுதி மளிகை வியாபாரிகள் சங்கத்தினர்  சங்க தலைவர் ஜான் வெஸ்ட்லி தலைமையில் வேட்பாளர் புஷ்பராஜை சந்தித்து  ஆதரவு தெரிவித்தனர். அப்போது பகுதி செயலாளர் மோகன்தாஸ், வட்ட செயலாளர் மூவேந்திரன் உள்பட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News