திருச்சி: குறைதீர்க்கும் நாள் முகாமில் பெறப்பட்டது 490 மனுக்கள்

திருச்சி மாவட்ட குறைதீர்க்கும் நாள் முகாமில் பொதுமக்களிடம் இருந்து 490 மனுக்கள் பெறப்பட்டது.

Update: 2022-06-21 05:35 GMT

பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார்.

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறை தீh;க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் தலைமையில்  நடைபெற்றது. இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், சாதிச் சான்றுகள், இதரச் சான்றுகள், குடும்ப அட்டை, முதியோh; உதவித் தொகை, நலத் திட்ட உதவிகள், அடிப்படை வசதிகள், திருமண உதவித் தொகை, பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோhpக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 490 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பில் காது கேளாத இரண்டு நபர்களுக்கு காது கேட்கும் கருவியை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.அபிராமி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் சி.அம்பிகாபதி, பழங்குடியின நல திட்ட அலுவலர் கீதா மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News