வியாபாரிகளிடம் ஆதரவு திரட்டினார் திருச்சி 20வது வார்டு வேட்பாளர் ஆறுமுகம்

வியாபாரிகளிடம் ஆதரவு திரட்டினார் திருச்சி 20வது வார்டு லோக்தந்திரிக் ஜனதா தளம் கட்சி வேட்பாளர் ஆறுமுகம்.;

Update: 2022-02-11 11:52 GMT

திருச்சி மாநகராட்சி 20வது வார்டில் லோக் தந்திரிக் ஜனதா தளம் கட்சி சார்பில் முன்னாள் கவுன்சிலர் கே.சி. ஆறுமுகம் போட்டியிடுகிறார். இன்று அவர் தனது வார்டுக்கு உட்பட்ட சின்ன கம்மாள தெரு, பெரிய செட்டி தெரு,பெரிய கம்மாளத்தெரு, நடுகுஜிலி தெரு பகுதியில் வீடு வீடாக சேகரித்தார்.


பின்னர் பெரிய கடைவீதி பகுதியில் உள்ள கடைகளில் வியாபாரிகளிடம் ஆதரவு திரட்டினார். அப்போது  வாக்காளர்கள் ஓட்டுக்கு பணம் வாங்காமல் சிந்தித்து வாக்களிக்குமாறு தான் அச்சிட்டு வைத்திருந்த துண்டு பிரசுரங்களையும் ஒவ்வொருவரிடமும் வினியோகம் செய்தார்.

Tags:    

Similar News