திருச்சி ரேஸ்கோர்ஸ் சாலையில் தண்ணீர் இல்லாமல் கருகும் நிலையில் மரங்கள்

திருச்சி ரேஸ்கோர்ஸ் சாலையில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகில் தண்ணீர் இல்லாமல் கருகும் நிலையில் மரங்கள் உள்ளன.

Update: 2024-04-22 15:07 GMT

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கம் சுற்றி வைத்த மரங்கள் தண்ணீர் ஊற்றாமல் செடிகள் எல்லாம் வாடி வருகிறது.

கோடை காலம் துவங்கும் முன்பே திருச்சி அனைத்து பகுதிகளிலும் மரங்கள் அனைத்தும் இலைகள் உதிர்ந்து காய்ந்துபோய் காணப்படுகிறது. இந்நிலையில்  வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் என்ற கோட்பாட்டில் சாலையோரங்களில் மரங்களை நட்டு வந்தனர். இதனால் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தில் மரத்தின் நிழலில் நாடிச் சென்று வந்தார்கள்.

அந்த வகையில் திருச்சி ரேஸ்கோர்ஸ் சாலை அண்ணா விளையாட்டு அரங்கம் அருகில் சுவரண் சிங் திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த கால கட்டத்தில் ஏராளமான  வேம்பு புங்கை உள்ளிட்ட மரங்கள் நடப்பட்டன. அந்த மரங்கள் எல்லாம் பெரிதாக வளர்ந்து இருந்தன. அந்த மரங்கள் தான் தற்போது தண்ணீர் இல்லாமல் இலைகள் உதிர்ந்து மரங்கள் பட்டுப்போன நிலைக்கு மாறி வருகிறது.

அண்ணா விளையாட்டு அரங்கை சுற்றிலும் தற்போது புதிதாக நடைபயிற்சியாளர்களுக்காக நடைபாதை அமைக்கும் பணி நடந்து வருவதால் மரங்களுக்கு தண்ணீர் ஊற்றப்படவில்லை.

இதன் காரணமாக தற்பொழுது திருச்சி பகுதியில் நடப்பட்ட மரக்கன்றுகளுக்கு தண்ணீர் இல்லாமல் வாடி வருகிறது.சாதாரணமான நாட்களை விட வெயில் காலத்தில் அதிகமாக வாடி அழிந்து விடும் நிலைக்கு சென்று கொண்டு இருக்கிறது.

எனவே மாவட்ட நிர்வாகம் , மாவட்டம் முழுவதும்  உள்ள மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றி பாதுகாக்க வேண்டும் என தண்ணீர் அமைப்பு மற்றும் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News