எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்து பெற்றார் அமைப்பு செயலாளர் டி. ரத்தினவேல்
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியிடம் அமைப்பு செயலாளர் டி. ரத்தினவேல் வாழ்த்து பெற்றார்.;
அ.தி.மு.க. அமைப்பு தேர்தல் கடந்த சில வாரங்களாக நடந்து வந்தது. மாவட்ட செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாநில நிர்வாகிகள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் திருச்சி புறநகர் மாவட்ட முன்னாள் அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான டி.ரத்தினவேல் மீண்டும் அமைப்புச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு திருச்சி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் ரத்தினவேல் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமியை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்.