திருச்சி மாவட்டத்தில் 29 தாசில்தார்கள் பணியிட மாற்றம்
திருச்சி மாவட்டத்தில் 29 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்து கலெக்டர் சிவராசு உத்தரவிட்டுள்ளார்.;
திருச்சி மாவட்ட வாய்த்துறையில் பணியாற்றும் 29 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதில், ஸ்ரீரங்கம் தாசில்தார் மகேந்திரன் மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளராகவும், திருச்சி மேற்கு தாசில்தார் ரமேஷ் துணை ஆய்வுக் குழு அலுவலராகவும், திருச்சி கிழக்கு தாசில்தார் சேக்முஜிப் மேற்கு தாசில்தாராகவும், லால்குடி தாசில்தார் சித்ரா ஸ்ரீரங்கம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், திருவெறும்பூர் தாசில்தார் செல்வகணேஷ் திருச்சி மேற்கு சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தொட்டியம் தாசில்தார் சாந்தகுமார் முசிறி கோட்ட கலால் அலுவலராகவும், துறையூர் தாசில்தார் ரமேஷ் திருவெறும்பூர் தாசில் தாராகவும் மாற்றப்பட்டுள்ள னர். மேலும் திருச்சி மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் சிராஜூதீன் ஸ்ரீரங்கம் முத்திரைக் கட்டண தாசில்தாராகவும், அங்கிருந்த சாந்தி மண்ணச்சநல்லூர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், மண்ணச்சநல்லூரில் பணியாற்றிய கருணாநிதி இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் அலுவலக சிறப்பு தாசில்தாராகவும், விடுப்பில் இருந்த தாசில்தார் ராகவன் பிற்படுத்தப்பட்டோர், சிறு பான்மையினர் துறை நிலமெடுப்பு தனி தாசில்தாராகவும், அங்கிருந்த சத்யபாமா திருச்சி-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை நிலமெடுப்பு தாசில்தாராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்ரீரங்கம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் அருள்ஜோதி திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலை நிலமெடுப்பு தனி தாசில்தாராகவும், அங்கிருந்த செல்வம் மருங்காபுரி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர். துணை ஆய்வுக்குழு அலுவலர் கண்ணகி துறையூர் ஆதி திராவிடர் நலத்துறை தனி தாசில்தாராகவும், அங்கிருந்த ஆறுமுகம் முசிறி ஆர்.டி.ஓ. நேர்முக உதவியாளராகவும், அங்கிருந்த சந்திர தேவநாதன் திருச்சி ஆதிதிராவிடர் நல தனி தாசில்தாராகவும், அங்கிருந்த அகிலா முசிறி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், திருச்சி மேற்கு சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் தனலட்சுமி திருச்சி மேலாண்மை அலகு நிலமெடுப்பு தனி தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
முசிறி கோட்ட கலால் அலுவலர் ரேணுகா திருச்சி மேற்கு தாலுகா உணவுப்பொருள் வழங்கல் தாசில்தாராகவும், அங்கிருந்த சண்முகராஜசேகரன் விழுப்புரம் திண்டுக்கல் அகல ரெயில் பாதை அலகு 2-ன் நிலமெடுப்பு தாசில்தாராகவும், அங்கிருந்த ஜெயப்பிரகாசம் திருச்சி கனிமம் மற்றும் சுரங்க தனி தாசில்தாராகவும், துவாக்குடி-பால்பண்ணை அணுகு சாலை நிலமெடுப்பு தாசில்தார் சுமதி திருச்சி கிழக்கு சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், அங்கிருந்த ரபீக் அகமது துவாக்குடி கலால் மேற்பார்வை யாளராகவும், மணப்பாறை சிப்காட் நிலம் எடுப்பு தாசில்தார் அசோக்குமார் துவாக்குடி-பால்பண்ணை அணுகு சாலை நிலம் எடுப்பு தனி தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
மருங்காபுரி சமூக பாதுகாப்புதிட்ட தனி தாசில்தார் குணசேகரன் ஸ்ரீரங்கம் தாசில் தாராகவும், கனிமம் மற்றும் சுரங்க தாசில்தார் சத்யநா ராயணன் தொட்டியம் தாசில்தாராகவும், முசிறி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் புஷ்பராணி துறையூர் தாசில்தாராகவும், திருச்சி-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை தனி தாசில்தார் கலைவாணி திருச்சி கிழக்கு தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு பிறப்பித்துள்ளார்.