போக்சோ வழக்கு விசாரணை பற்றி திருச்சி காவல் துறை அதிகாரிகளுக்கு பயிற்சி
போக்சோ வழக்கு விசாரணை பற்றி திருச்சி காவல் துறை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
போக்சோ சட்டம் (Protection of Children from Sexual Offences Act) என்பது 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பாதுகாக்க 2012-ல் இந்திய அரசால் இயற்றப்பட்ட சட்டமாகும்.
சட்டம் எப்போது அமலுக்கு வந்தது?
2012 ல் நிறைவேற்றப்பட்ட போக்சோ சட்டம் 2012 நவம்பர் 14 ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
போக்சோ சட்டத்தின் நன்மைகள்:
குழந்தைகளுக்கு பாதுகாப்பு: பாலியல் வன்கொடுமை, துஷ்பிரயோகம், வன்கொடுமை போன்ற குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கிறது.
தண்டனைகளில் கடுமை: குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளை வழங்குகிறது.
குழந்தைகளின் உரிமைகள்: குழந்தைகளின் உரிமைகளை அங்கீகரித்து, பாதுகாக்கிறது.
பாலியல் விழிப்புணர்வு: பாலியல் வன்கொடுமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
சிறப்பு நீதிமன்றங்கள்: போக்சோ வழக்குகளை விரைவாக விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
புகார் அளிக்க உதவி: 1098 என்ற இலவச எண்ணில் புகார் அளிக்கலாம்.
பெண் குழந்தைகளுக்கு கிடைக்கும் நன்மைகள்:
பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பாதுகாப்பு: பெண் குழந்தைகளை பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பாதுகாக்கிறது.
கல்வி மற்றும் வாழ்வில் முன்னேற்றம்: பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் வாழ்வில் முன்னேற உதவுகிறது.
மன உறுதி: நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை அளித்து மன உறுதியை வளர்க்கிறது.
குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச தண்டனை:
கற்பழிப்பு: ஆயுள் தண்டனை மற்றும் அபராதம்.
கொலை: மரண தண்டனை.
பாலியல் வன்கொடுமை: 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம்.
பாலியல் துன்புறுத்தல்: 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம்.
திருச்சியில் பயிற்சி
திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி உத்தரவின் பேரில் இன்று புதன்கிழமை திருச்சி மாவட்ட ஆயுதப்படை திருமாங்கல்யம் திருமண மண்டபத்தில் திருச்சி மாநகரத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பெண் காவல் அதிகாரிகள் முதல் பெண் காவலர்கள் வரை கலந்து கொண்ட பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012 (போக்சோ சட்டம்) பற்றி பயிற்சி நடைபெற்றது.
இக்கூட்டத்தில் குற்ற வழக்குகள் தொடர்பு துறை துணை இயக்குனர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார். போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்ட பின் புலன் விசாரணை எவ்வாறு திறம்பட செய்ய வேண்டும் எனவும் வழக்குகளின் விசாரணையில் செய்யக்கூடிய பைக் மற்றும் செய்யக்கூடாதவை பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும் வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனையை பற்றி தருவதற்கு திறம்பட தொழில் ஒழுக்கங்களுக்கான அறிவுரைகள் வழங்கப்பட்டது அதிகாரிகள் மற்றும் காவல் அதிக ஆளினர்களின் சந்தேக விளக்கங்களுக்கு தகுந்த விளக்கம் அளித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது மேலும் இந்நிகழ்வில் மாநகர காவல் துணை ஆணையர் தலைமையிடம் பெண் காவல் ஆணையர் உதவி ஆய்வாளர்கள் மற்றும் பெண் காவல் ஆளுநர்கள் உட்பட 75 பேர் கலந்து கொண்டார்கள்.